Friday 8 January 2016

'108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

முறைகேடுகளை சுட்டிக் காட்டியதால், பழி வாங்கப்பட்ட ஊழியர்களுக்கு, மீண்டும் வேலை தரக்கோரி, '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் சேவை செயல்பாட்டில் உள்ளது. இதை, ஜி.வி.கே., என்ற தனியார் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது; 3,600 ஊழியர் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக, ஆம்புலன்ஸ் சேவையில், முறைகேடுகள் நடப்பதாக, ஊழியர் சங்கம் குற்றம் சாட்டி வருகிறது. மேலும், 8 மணி நேரம் வேலை; கூடுதல் நேரத்திற்கு, கூடுதல் சம்பளம் போன்ற கோரிக்கைகளையும், ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, நேற்று, தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்; 200 பேர் பங்கேற்றனர்.


நிர்வாகத்தில், பல முறைகேடுகள் நடக்கின்றன. இதைச் சுட்டிக் காட்டியதாலும், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும், 112 ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்; முறைகேடுகளற்ற, நேர்மையான நிர்வாகம் வேண்டும்; ஊழியர்களுக்கு விதிமுறைப்படி பயன்கள் கிடைக்க வேண்டும். இதற்காகவே, போராட்டம் நடத்துகிறோம். ஜெய்பிரகாஷ், ஆம்புலன்ஸ் ஊழியர் சங்க மாநில செயலர்
THANKS :  http://www.dinamalar.com/district_detail.asp?id=1429260

Thursday 7 January 2016

108 சேவையைச் சீர்குலைக்கும் ஊழியர் வேலைக்கு உலை வைக்கும் G V K - EMRI வை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

அனைத்து தொழிலாளர் தோழர்களும் கலந்து கொள்வீர். சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தோழர்களுக்காக அணி திரள்வீர்

.
பட்டினிப் போராட்டம்
நாள் :   08.11.2016 - இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை ,  சென்னை

11.01.2016 - நாமக்கல்
12.01.2016 - விருதுநகர்

Sunday 30 November 2014

"108 ஆம்புலன்ஸ்' வாகன ஊழியர்கள் போராட்டம்--சென்னை வள்ளுவர் கோட்டம்

ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு
ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு "108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள் சங்கத்தினர். 
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தக்க பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என்று கூறி, "108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் சென்னையில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Friday 17 October 2014

108 AWU (COITU ) விற்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி !

108 AWU (COITU ) அறிவித்திருந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை அடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில்(17.10.2014) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு11.5%அதாவது ரூ. 4800 வருடாவருடம் கொடுக்க GVK - EMRI நிறுவனம் ஒப்புக்கொண்டது.


108 அவசர ஊர்தி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
அதன் அடிப்படையில் 108 AWU வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்