Monday 18 July 2011

தினமலர்: உயிர் காக்கும் 108 ஐ காப்பாற்ற அரசு நடவடிக்கை தேவை.

ஊழியர்கள் பற்றாக்குறையால் 108 ஆம்புலன்ஸ் திட்டம் முடங்கும் அபாயத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும், தி.மு.., ஆட்சிக் காலத்தில் ,உயிர் காக்கும் உன்னத சேவை திட்டத்தின் கீழ் , 108   அம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் , அதிநவீன வசதிகள் கொண்ட கருவிகளுடனும், 500க்கும் மேற்பட்ட இலவச ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. 
 மாவட்டத்தின் பரப்பளவை கொண்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் , 30 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அளிக்கப்பட்டன. தற்போது , அதிகாரிகள் ஏற்படுத்தும் மன உளைச்சலாலும், சம்பளப் பற்றாக்குறையாலும் , 108 ஆம்புலன்ஸ் திட்டம் முடங்கும் அபாயத்தில் உள்ளது. 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிலர் கூறியதாவது. மாநிலம் முழுவதும் சுராஜ் மஸ்தா என்ற வாகனமே , 108 ஆம்புலன்சாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாகனம், சாதரணமாக ஒரு லிட்டர் டிசலுக்கு,12 கி.மீ.ஓடும். வேகமாக இயக்கினால், 10 கி.மீ. ஆக குறைய வாய்ப்புள்ள நிலையில் , லிட்டருக்கு, 15 கி.மீ., கிடைக்கும்படி வாகனத்தை இயக்க, உத்தரவிடுகின்றனர். அது மட்டுமல்லாமல் , சம்பள உயர்வு வழங்கப்படாததால், அனைத்து மாவட்டங்களிலும் டிரைவர்கள் பலர் மாற்று தொழிலுக்கு மாறியதால், ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. போலியான கணக்கு, உதிரி பாகங்கள் வாங்குவதில் மோசடி என அரசின் இலவச , 108 ஆம்புலன்சால், அதிகாரிகள் பலரும், பல லட்சம் ரூபாயை சம்பாதித்தனர். தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, முறைகேட்டில் இடுபட்ட அதிகாரிகளை நீக்க வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் ,108 ஆம்புலன்ஸ் திட்டம் முடங்கும் அபாயம் உள்ளது.
நன்றி : தினமலர், நாள் : 18 .07 .2011 , சென்னை பதிப்பு

No comments:

Post a Comment