Monday 18 July 2011

13 மாவட்டங்களை சேர்ந்த 108 ஊழியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் மனு அளித்தனர்

18 .07 .2011 திங்கள் கிழமை மனுகொடுக்கும் போராட்டத்தின் மூன்றாவது கட்டமாக திருநெல்வேலி , ராமநாதபுரம், சிவகங்கை , திண்டுக்கல், கரூர்,திருச்சி ,ஈரோடு, உதகமண்டலம், அரியலூர், தஞ்சாவூர், நாகபட்டினம் , விழுப்புரம், கிருஷ்ணகிரி,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இன்று அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் தங்களது 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு அளித்தனர். திருச்சி மாவட்ட .. மற்றும் , டி.எம் .ஆகிய இருவரும் அந்த மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் செல்லக்கூடாது என்று பலவாறாக மிரட்டல் விடுத்தனர். ஆனாலும் மிரட்டலுக்கும், பசப்பு வார்த்தைகளுக்கும் பயம் கொள்ளாமல் அனைவரும் மனு அளிக்க கலந்து கொண்டனர். இந்த மூன்றாடண்டு காலமாக ஜி.வி.கே. நிறுவனம் அதில் பணி புரியும் ஊழியர்களை ஈவிரக்கமின்றி சுரண்டி வருகிறது. மிக குறைந்த ஊதியம், தொழிலாளர் சட்ட விரோதமாக 12 மணி நேரம் வேலை, என்று நாகரீக சமுதாயம் ஏற்றுக்கொள்ளவே இயலாத அளவிற்கு பல கொடுமைகளை இந்த நிறுவனம் தொழிலார்களுக்கு இளைத்து வருகிறது.

 எதற்கும் ஒரு முடுவு உண்டு என்பதற்கேற்ப இன்று மாநிலம் முழுவதும் தென் கோடியில் இருந்து வடகோடி வரை அனைத்து தொழிலாளர்களும் இந்த நிறுவனத்தின் சட்ட விரோத போக்குகளுக்கு எதிராக திரண்டுள்ளனர். ஆனாலும் நிறுவனம் தொழிலாளரின் நியாயமான கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் ,அவர்களின் போராட்டத்தை அனைத்து வழிகளிலும் ஒடுக்கவே முயற்சி செய்தது. இனியும் செய்யும் , நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்குகளை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம், நமது சட்டபடியான அனைத்து உரிமைகளையும் போராடிபெருவோம் .

No comments:

Post a Comment