Wednesday 13 July 2011

கடலூர் மாவட்ட பைலட், மற்றும் இஎம்டியை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு

12.07.2011 அன்று மாலை மணியளவில்  கடலூர்  மாவட்டம் புதுப்பேட்டை  ஆம்புலன்ஸ் விழுப்புரம் எல்லையில் நடந்த விபத்தில் அடிபட்டவர்களை காப்பாற்றுவதர்க்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆனத்தூர் என்ற இடத்திற்கு சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளிக்க முயற்சி செய்த போது அங்குள்ள பேர்கள் ஆம்புலன்ஸில் ஏறினார்கள்.
இஎம்டியும் பைலட்யும் இருவர் மட்டும் ஏறிக்கொள்ளுங்கள் மற்றவர்கள் இறங்கி கொள்ளுமாறும்,  இவ்வளவு பேர்கள் ஏறினால் முறையான  முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு பெரும் இடையூறாக இருக்கும் என்றும் சொன்னார்கள் ஆனால் அதற்கு  அங்குள்ளவர்கள் சம்மதிக்கவில்லை. அத்தோடு இஎம்டி மற்றும் பைலட்டை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். பைலட் மற்றும் இஎம்டி இருவரையும் கடுமையாக  தாக்கினார்கள். இதில் கடும் காயம் அடைந்த பைலட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி சங்கத்தின்  சார்ப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது நிறுவனத்தின் தொழிலாளிகள் தங்களது கோரிக்கைகளை வழியுறித்தி  சட்டபூர்வமான மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்தல் மற்றும் நிறுவனம் செய்து வரும் முறைகேடுகளை தட்டி கேட்டல், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் தொழிலாளர் நல சட்டங்களின் படி உரிமைகளை கேட்பது மற்றும் சட்டப்படி சங்கம் அமைத்தல் ஆகியவைகளுக்கே  கடும் போலிஷ்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் நிர்வாகம் தனது தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஒரு சிறு வழக்கு கூட பதிவு செய்ய வைக்க திறனில்லை என்பது தான் இன்றுள்ள அதன் நிலைமை. தொழிலாளர்கள் நெருக்குதல் காரணமாக பைலட், இஎம்டியை தாக்கியவர்கள் மீது 323, 506(2), 294  ஐ.பி.சி. ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்தோடு உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டுமென வழியுறுத்தப்பட்டுள்ளது .இது போன்று தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க ஜிவிகே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



No comments:

Post a Comment