Thursday 4 August 2011

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் : மதுரையில் மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்



108  ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்துதல் , அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெரும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்குதல், தன்னிச்சையாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரைப் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடுத்தல் , 8  மணி நேரத்திற்கு அதிகமாகச் செய்யும் வேலைக்கு ஓவர்டைம் வழங்குதல் , அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டை சம்பளமோ அல்லது மாற்று விடுப்போ வழங்குதல் , வாகனத்தைத் தூய்மையாகவும் உரியமுறையிலும் பராமரிப்பதற்கும் , ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் தங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யவும்  போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி மாநில அளவிலான   108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்  மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 4 .8 .2011  காலை 10.30 அளவில் நடத்தியது , இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு பணிச் சுமைக்களுக்கு நடுவே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

இந்த சங்கத்தின் சட்ட ஆலோசகரும், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் ,சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பின் தலைவருமான தோழர்.த.சிவக்குமார் அவர்கள் இந்த் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் துணைத்தலைவரும் , விருது நகர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டியின்  மாநில தலைவருமான தோழர். வரதராஜ் அவர்களும் , மற்றும் மதுரை மாவட்ட108  ஆம்புலன்ஸ் சங்க பொறுப்பாளர்களும் ,மாநில பொறுப்பாளர்களும் கவன ஈர்ப்பு உரை நிகழ்த்தினார்கள். மிகவும் நேர்த்தியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் 108  ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டிய தேவையை எடுத்து சொன்னார்கள் . ஜி.வி.கே. நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத ஆணவப்போக்கை  கண்டித்தும் , அரசே ஏற்று நடத்த கோரியும் விண்ணதிர கோஷங்களை தொழிலாளர்கள் எழுப்பினார்கள் . திரளாக தொழிலாளர்களும், தொழிலாளர்களின் குடும்பத்தினரும், பொதுமக்களும் ,COITU  மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த தோழர்களும் ,வழக்கறிஞர்களும் பெருமளவில் கலந்து கொண்டு 108  ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த கோரிக்கை வைத்தனர்.

No comments:

Post a Comment