Wednesday 3 August 2011

சென்னை , திருவள்ளூரில் தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் டி.எம்., மற்றும் ஒ.இ.


நமது தமிழக முதல்வர் அவர்கள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட கடுமையாக போராடிவருகிறார்கள். சென்ற ஆட்சியில் நிலப்பறிப்பு,கொலை , ஆள்கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்ட தி.மு.க. ஆட்சியாளர்களை குற்ற வழக்குகள் பதிவு செய்து கைது செய்து வருகிறார்கள் . ரவுடிகள் இவ்வாறு ஒடுக்கப்படுவது பொது மக்கள் மத்தியில் முதல்வருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. நமது முதல்வரின் கனவை நிறைவேற்றவே 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகிறார்கள். 
ஊழல் மன்னன் கருணாநிதியின் கூடாத நட்பால் உலக மகா மோசடி நிறுவனமான சத்யத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு 108  ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. சத்யம் தனது முதலீட்டாளர்களை தான் ஏமாற்றியதே தவிர தனது தொழிலாளர்களை கொடுமைப்படுத்தவில்லை. ஆனால் ஜி.வி.கே.நிறுவனமோ தனது நிறுவனத்தில் விசுவாசமாக பணிபுரியும் தொழிலாளர்களை கொடுமைப்படுத்துவதே தனது ஒரே
கொள்கையாக வைத்துள்ளது. சென்னை , திருவள்ளூர் மாவட்ட டி.எம். மற்றும் ஒ.இ. இருவரும் தான் தான் முதல்வர் என்பது போல் செயல்பட்டு வருகிறார்கள். சென்னை , திருவள்ளூரில் கடந்த ஒரு வருடமாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை வெவ்வேறு தூரமான இடங்களுக்கு இடம் மாற்றம் செய்துள்ளதுநிர்வாகம். இவ்வாறு இடமாற்றம் செய்யும் போது பொதுவாக ஊழியர்களுக்கு எழுத்து பூர்வமான அறிவிப்பு எதுவும் இஎம்ஆர்ஐ கொடுப்பதில்லை. ஊழியர்களின் வேண்டுதலையும் நிர்வாகம் காது கொடுத்து கேட்பதில்லை . இது போன்ற இஎம்ஆர்ஐ  தொழிலாளர்களுக்கு இழைக்கும் அனைத்து கொடுமைகளையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment