Saturday 3 September 2011

கேபிள் டி.வி.யை அரசே ஏற்றது போல 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

 கலாநிதி மாறனின் சுமங்கலி கேபிள் விசன் மட்டுமே அனைத்து கேபிள் டி.வி.களையும் தனது அதிகாரம் , பணபலம் ஆகியவற்றின் துணை கொண்டு தமிழக மக்களை பகல்  கொள்ளை அடித்து வந்தனர். மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் பதவிக்கு வந்தவுடன் கேபிள் டி.வியில் தனியார் சர்வாதிகாரத்தை ஒடுக்கி , அரசே அதை ஏற்று நடத்தி  மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. கிடைக்கும்படி செய்துள்ளார்.
108  ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு  அந்திராவை சேர்ந்த ஜி.வி.கே.நிறுவனம் சொல்லெனா  கொடுமைகளை இளைத்து வருகிறது. 12  மணி நேரத்திற்கு மேல் வேலை , மிகக்குறைந்த சம்பளம் , சொந்த ஊரில் வேலைக்கு அமர்த்தாதது , போன்ற கொடுமைகளை இளைத்து வருகிறது, அரசின் பணத்தின் மூலம் ஏழை மக்களுக்கு கிடைக்கும் சேவையை நந்தி போல குறுக்கே இருந்து கொண்டு ஜி.வி.கே.கொள்ளை லாபம் அடித்து வருகிறது. ஜி.வி.கே வின்  இந்த கொள்ளையை தடுத்து ஏழை மக்களுக்கு அரசின் முழுமையான இலவச ஆம்புலன்ஸ் சேவை சென்றடைய  வேண்டுமானால் தமிழக அரசே இந்த 108  ஆம்புலன்ஸ் திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். அதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் செய்வார்கள் என்று 108  ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment