Friday 16 September 2011

கடலூர் மாவட்ட ஊழியர்களை பந்தாடும் ஜி.வி.கே.

அமைதியான முறையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 108  ஆம்புலன்ஸ்  ஊழியர்கள் கடந்த 8  ம் தேதி அன்று    உண்ணாவிரதப் போராட்டத்தை கடலூரில் நடத்தினார்கள். இது வரை 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் நடத்திய போராட்டங்களில் நிர்வாகத்தின் எந்தவிதமான பணிகளும் பாதிக்காமல் தான் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. ஆந்திராவில் நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தம் போன்று  இல்லாமல்   108  சேவைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் தான் சங்கம் போராடி வருகிறது.

அவசர சேவையின் தேவையை சங்கம் நன்றாக உணர்ந்திருக்கிறது , அதை அரசிடம் தெளிவாக அறிவித்துள்ளது. ஆனாலும் ஜி.வி.கே.நிர்வாகம் சங்கத்தை ஒடுக்கும் வேலையை கட்சிதமாக செய்து வருகிறது. இது ஜி.வி.கே.வின் கேடுகெட்ட லாபவெறிபிடித்த முதலாளித்துவ திமிர் என்பதை தவிர வேறொன்றும் இல்லை. கடலூர் மாவட்ட ஊழியர்கள் மூவருக்கு சென்னைக்கு மாற்றல் செய்ததன் மூலம் அப்பாவி ஊழியர்களை பழிவாங்க துடிக்கிறது  ஜி.வி.கே. ஏற்கனவே குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சென்னை போன்ற இடங்களில்  பணிபுரிந்து எவ்வாறு தங்கள் குடும்பத்தை நடத்துவார்கள் என்பதை மனிதநேயம் கொண்ட யாரும் யோசிப்பார்கள். ஆனால் ஒ.இ.,  டி.எம்., ஆர்.எம். போன்ற பதவியில் இருக்கும் மனித தன்மை சிறிதும் இல்லாதவர்களிடம் நம்முடைய எந்தவிதாமான நியாயமான கோரிக்கைகளும் எடுபடபோவதில்லை. ஒ.இ, பிளிட், டி.எம்., ஆர்.எம்., எச். ஆர். போன்றவர்கள் இது வரை செய்த ஊழல்களை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லவும்., ஜி.வி.கே.வின் இந்த மோசடி தனத்தை தமிழகம் முழுவதும் அம்பலபடுத்தவும், அவர்கள மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்
சங்கம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment