Saturday 19 November 2011

இலவச பஸ் பாஸ் உடனே தர வேண்டும்

தமிழக அரசு பஸ் கட்டணம், பால், மற்றும் மின்சாரக்  கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளது.ஏற்கனவே குறைவான சம்பளம் வாங்கி கொண்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.ஜி.வி.கே.நிர்வாகம் அது ஒப்புக்கொண்டபடி சொந்த ஊரில் வேலை கொடுக்காமல் , அனைத்து ஊழியர்களுக்கும் சொந்த ஊரில் இருந்து சுமார் 80  கிலோ மீட்டர் தள்ளியே ஒவ்வொருவரும் சென்று வேலை பார்த்து திரும்பி வரும்படி கொடுமைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வாங்கும் சம்பளம் முழுவதும் பஸ் டிக்கட்டுக்கே சரியாக இருக்குமானால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எப்படி குடும்பம் நடத்துவது?.


ஆரம்பம் காலம் தொட்டே பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் அதற்கு சிறிதும் மனித தன்மையே இல்லாத லாபம் ஒன்றே குறிக்கோளாக இயக்கும் நிர்வாகம் செவி சாய்க்கவில்லை .உடனடியாக தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு இலவச பஸ் பாஸை பைலட், இ.எம்.டி.மற்றும் கால் சென்டர் ஊழியர்களுக்கு வழங்கக வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். 

No comments:

Post a Comment