Tuesday 20 December 2011

108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் முறைகேடு : விசாரிக்ககோரி வழக்கு தலைமை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்டு உத்தரவு


108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் தலைமை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  

800 கோடி இழப்பீடு 
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அனைத்து ஆம்புலன்ஸ் வேன்களையும் மத்திய அரசு அளித்துள்ளது. ஆனால் இந்த சேவைக்கான காண்ட்ராக்டு ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராமலிங்க ராஜு (தற்போது ஜி.வி.கே ) என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் மற்ற ஆம்புலன்சையும் சேர்க்கும் போது கான்ட்ராக்ட்டு அளிக்கப்பட்டுள்ள நபருக்கு வருமானம் குறைந்து விடும் என்ற நோக்கத்தில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது தெரிய வருகிறது . 

அரசு பணம் வீணாகிறது 
2008 - 2009 - ம் ஆண்டு 108 சேவைக்காக தனியார் காண்ட்ராக்டு நிறுவனம் ரூ.230 கோடியே 98 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறுகிறது. ஆனால் அரசிடம் இருந்து 172 கோடியே 64 லட்சம் ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது. மீதி தொகையை தனியார் நிறுவனம் பெறவில்லை. இதன் மூலம் வருமான வரி சலுகைபெற்றுள்ளனர். இது ஒரு விஞ்ஞான ரீதியான மோசடியாகும். எனவே இந்த மோசடி குறித்து விசாரித்து அரசு பணம் வீணக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் ,சுகாதார துறை செயலாளர் , லஞ்ச ஒழிப்புத்துறை அணையாளர் ஆகியோருக்கு மனு கொடுத்தேன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே இந்த முறைகேடு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். 
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

நோட்டீசு 
இந்த மனு நீதிபதிகள் கே.என்.பாஷா , எம்.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
நன்றி : தினத்தந்தி 

No comments:

Post a Comment