Thursday 15 March 2012

பணி மூப்பு அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க வேண்டும்


இதுவரை வருடாந்திர சம்பள உயர்வு வழங்கும்; போது சிலருக்கு கூடுதலாகவும் சிலருக்கு குறைவாகவும் உயர்த்தப்படுகிறது வழக்கமாக இருந்து வருகிறது. பல சமயங்களில் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தவருக்கு கூடுதலாகவும் பணி மூப்பு உள்ளவருக்கு குறைவாகவும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காரணம் கேட்ட போது வேலைச் செயல்பாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் (Performance) சம்பள உயர்வு வழங்கப்படுவதால் இவ்வேறுபாடு இருக்கத்தான் செய்யும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் தங்களின் வேலைச் செயல்பாடு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது, என்றோ  ஏன் குறைவாக சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றோ  அவரின்  எந்தச் செயல்பாடு குறைபாடுடையது. அவற்றைப் போக்க அவர் என்ன செய்ய வேண்டும் என்றோ, எந்த ஊழியருக்கும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை.



 இதனால் OE மற்றும் DM களுக்கு வேண்டியவர்கள், பிடித்தமானவர்களுக்கு கூடுதல் சம்பள உயர்வும், வேண்டாதவர்கள், பிடிக்காதவர்களுக்கு குறைவான சம்பள உயர்வும் வழங்கப்படுகிறது. அவ்வாறு பாரபட்சம் காட்டப்படுவதால் ஊழியர்களிடையே மனஸ்தாபங்களும் பரஸ்பரம் அவநம்பிக்கையும் சேவையில் உற்சாகக் குறைவும் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் சேவையின் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதைப் போக்க வெளிப்படையான மதிப்பீட்டு முறையை புதிதாக அறிமுகப்படுத்தப் போவதாக மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் அவர்கள் முன்னிலையில் HR அவர்கள் வாக்குறுதியளித்தார். ஆனால் மூன்று  மாதங்களுக்கு மேலாகியும் அத்தகைய மதிப்பீட்டு முறை இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் Performance Appraisal-க்கு தற்போது நடைமுறையில் இருக்கும் முறையைக் கை விட வேண்டும் என்றும் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவிருக்கும் வருடாந்திர சம்பள உயர்வு, பராபட்சம் எதற்கும் இடமளிக்காத விதத்தில் பணிமூப்பின் அடிப்படையில் ஒரே சீரான விகிதத்தில் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
           

No comments:

Post a Comment