Tuesday 3 April 2012

"பீப்பிங் டாம்" பால் ராபின்சன்: பெண் இ.எம்.டி களிடம் அத்துமீறும் அதிகாரிகளுக்கு ஆதரவாக 108 ஆம்புலன்ஸ் ஜி.வி.கே. நிர்வாகம்


திண்டுக்கல் மாவட்டத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் இ.எம்.டி.யிடம் கடந்த வருடத்தில் அந்த மாவட்ட ஒ.இ. ஆக வேலை பார்க்கும் குமரன் பாலியல் ரீதியில் துன்புறுத்தி மானபங்கப் படுத்தினார். அந்த பெண் இ.எம்.டி. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஒ.இ. மீது இந்திய தண்டனை சட்டம் 506 (2 ) உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அப்போது பல்வேறு பத்திரிக்கைகளில் அந்த செய்தியும் வந்துள்ளது. ஆனால் ஜி.வி.கே. நிர்வாகம் அவசர உதவி பணிகளில் சேவை நோக்கத்தோடு பணிபுரியும் பெண் இ.எம்.டி.யிடம் தவறாக நடக்க முயன்ற ஒ.இ.குமரன் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த பெண் இ.எம்.டி. யை எந்தவித விசாரணையும் செய்யாமல் பணிநீக்கம் செய்துவிட்டது. ஜி.வி.கே. நிர்வாகத்தின் ஆணாதிக்கத் திமிர் எந்த அளவிற்கு என்றால் அந்த பெண் இ.எம்.டி. க்கு அளித்த பணிநீக்க உத்தரவில் " உயர் அதிகாரி மீது நீங்கள் புகார் அளித்ததால் பணிநீக்கம் செய்யப்படுவதாக வெளிப்படையாகவே  உத்தரவிட்டுள்ளனர். இப்போது அந்தக் காமக் கொடூரன் குமரன் உயர் அதிகாரியாக ஜி.வி.கே. நிர்வாகத்தில் இருக்கிறார். ஆனால் அவரால் பாதிக்கப் பட்ட அந்த அப்பாவி பெண் இ.எம்.டி. வேலையும் இழந்து வெளியில் இருக்கிறார். ஆனால் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தந்தே தீருவேன் என்ற மன உறுதியுடன் அந்த குற்ற வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இதை போலவே கன்னியாகுமரியை சேர்ந்த பெண் இ.எம். டி. ஒருவர் கடந்த வருடம் பல்வேறு புகார்களை அப்போது உயர் அதிகார்களாக இருந்தவர்கள் மீது கொடுத்த போதும் அந்த உயர் அதிகாரிகளை மருந்துக்கு கூட விசாரணை செய்யாமல் புகார் கொடுத்த பெண் இ.எம்.டி.யை  சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்தது தொழிலாளர்களை கொடுமை படுத்தும் ஜி.வி.கே. நிர்வாகம்.

தங்களிடம் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் எந்தவிதமான அத்துமீறல்களை நிகழ்த்தினாலும் அதை கண்டு கொள்ளாது ஜி.வி.கே. நிர்வாகம் என்பதால் தையிரியம் கொண்ட  உயர் அதிகாரிகள் இதுபோல் பல்வேறு அத்துமீறல்களை அரங்கேற்றிவருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த டி.எம். பால் ராபின்சன் அவர்களில் ஒருவர்

பால் ராபின்சன் ஒரு வக்கிரமான எண்ணம் கொண்ட மனநோயாளி. என்ன காரணத்தினாலோ அவருக்கு 34 வயதாகியும் திருமணமாகவில்லை. அதனால்தானோ என்னவோ அவர் எப்பொழும் பெண் ஊழியர்கள் ஓய்வெடுக்கும் போது சர்ப்ரைஸ் விசிட் என்ற பெயரில் அரவம் இல்லாமல் ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்பது; அறைக்குள் திடீரென்று நுழைவது; பெண் இ.எம்.டிக்களை பாலியல் ரீதியான வார்த்தை களால் திட்டி சித்திரவதை செய்வது என்று அவரது வக்கிரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவரை அனைவரும் "பீப்பிங் டாம்" என்றுதான் அழைப்பார்கள். இவரால் வேலை இழந்து வாழ்க்கை இழந்த பெண் இ.எம்.டிக்கள். ஏராளம். ஒருவரது திருமணமே இவரது காரியத்தால் காவல்நிலையம் வரை சென்று நின்றுபோயுள்ள்ளது.

தற்போது அந்த "பீப்பிங் டாம்" பால் ராபின்சன் செய்துள்ள குற்றம் மனிதநேயம் கொண்ட யாராலும் மான்னிக்க‌ முடியாத குற்றம் ஆகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் பெண் இ.எம்.டி. ஒருவர் கடந்த வாரத்தில் பணியில் ஓய்வு அறையில் பாத் ரூம் போய்விட்டு உடைகளை சரிசெய்து கொண்டு இருந்தபோது, அவரின் அனுமதி எதுவும் பெறமால் அவருக்குத் தெரியாமல் அரவமின்றி உள்ளே நுழைந்துள்ளார். அதனால் பதறி அடித்து கொண்டு அந்த பெண் இ.எம்.டி. ஏன் இவ்வாறு தனியாக இருக்கும் பெண் அறையில் அனுமதி பெறாமல் உள்ளே வந்தீர்கள் என்று கேட்டதற்கு, நான் உயர் அதிகாரி நான் யாரிடமும் அனுமதி அனுமதி பெறத்தேவையில்லை என்று கூறியதோடு அவரிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.  அப்பெண் இ.எம்.டி. உடனே அறையிலிருந்து வெளியேறியுள்ளார். அப்போது வெளியில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் "பீப்பிங் டாம்" பால் ராபின்சனை கண்டித்துள்ளார். உடனே அவர் நான் யார் என்று காட்டுகிறேன் என்று கூறி அப்பெண் இ.எம்.டி.யையும் டிரைவரையும் அப்போதே வேலையை விட்டு நீக்கிவிட்டு, அந்த லோக்சனில் இருந்த வண்டியை டவுன் டைம் போட்டுள்ளார்.அந்த லொக்கேசனில் அருகிலேயே ஒரு சாலைவிபத்து அவசர அழைப்பு வந்துள்ளது அதற்கு தூரத்திலிருந்து வேறொரு ஆம்புலன்ஸை வரச்சொல்லியிருக்கிறார். அங்கிருந்த பொதுமக்கள் பக்கத்திலையே ஒரு ஆம்புலன்ஸ் வண்டி இருந்த போதும் ஏன் பக்கத்து லொக்கேசனில் இருந்து ஆம்புலன்ஸ் வருகிறது என்று புகார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மக்களின் சேவைக்காக துவங்கப்பட்ட ஒரு பொது திட்டத்தை தனது அகம்பாவத்தை காட்டுவதற்காக ஒரு டி.எம். உபயோகப்படுத்துகிறார். இவ்வாறு பெண் இ.எம்.டி.யிடம் தவறாக நடக்க முயன்ற அரசு சொத்தை தந்து சொந்த திமிரை காட்டுவதற்கு உபயோகப்படுத்தும் ஒரு டி .எம். மீது ஜி.வி.கே. நிர்வாகம் அந்த பெண் இ.எம்.டி. க்கு இன்று வரை வேலை கொடுக்காமல் இருக்கிறது. நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா? 

பாதிக்கப்பட்ட அப்பெண் இ.எம்.டி.க்கு நியாயம் கிடைக்கும் வரை "பீப்பிங் டாம்" பால் ராபின்சனுக்கு தக்க தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கமும் (108AWU) ஊழியர்களும் உறுதிபூண்டுள்ளனர். அரசின் பொது சொத்தை தனது சுயலாபத்திற்கு கூறு போட்டு பிழைக்கும் ஜி.வி.கே. வின் எந்தவிதமான அராஜக செயலும் அரசின் காதுகளுக்கு எட்டாதா என்பதே நமது கேள்வி. அதுவம் பெண் முதல்வர் ஆளும் தமிழ்நாட்டில் பெண் ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை மாற்றவும் , அந்த பொல்லாத டி.எம். மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் அரசு முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment