Monday 30 April 2012

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு மே தின ( தொழிலாளர் தின ) நல் வாழ்த்துக்கள்


தொழிலாளர் தினம் என்பது பல்வேறு அரசு விடுமுறைகளைப் போலவே வரக்கூடிய ஒரு விடுமுறை தினம் மட்டுமல்ல. தொழிலாளர் தினம் உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்களால் மே முதல் நாள் அன்று அனுசரிக்கப்படுவது ஆகும். முதன் முதலாக சிகாகோ நகரில் உள்ள தொழிலாளர்களால் 8 மணி நேரம் வேலை , 8 மணி நேரம் ஓய்வு , 8 மணி நேரம் சமுதாயப்பணி என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. அவ்வாறு கோரி போராடிய தொழிலாளர்கள் ரத்தத்தால்  மூழ்கடிக்கப்பட்டார்கள்.

ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கை உலகம் முழுவதும் பரவி பல்வேறு தொழிலாளர் இயக்கங்களின் மூலமாக உலகம் முழுவது 8 மணி நேரம் வேலை நேரம் என்பதாக மாறியது.  சிகாகோ  தொழிலாளர்களை நினைவு கூறும் அதே வேளையில் உலகம் முழுவதும் 8 மணி நேரம் என்பது சட்டமாக மாறிய பின்பும், ஜி.வி.கே. ஆம்புலன்ஸ் நிர்வாகம் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தையே  காலில் போட்டு மிதித்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 12 மணி நேரம் தான் வேலை நேரம் என்று அடம் பிடிக்கிறது. தொழிலாளர் தினமான மே நாளில் நம்முடைய சட்டப்படியான உரிமைகளை வென்றெடுக்க சபதமேற்போம். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணிபுரியும் பைலட் , இ.எம்.டி. மற்றும் கால் செண்டர் ஊழியர்களுக்கு தொழிலாளர் தின நல் வாழ்த்துகளை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (108AWU ) தெரிவித்துக் கொள்கிறது. 

No comments:

Post a Comment