Wednesday 18 April 2012

உயர்நீதிமன்ற உத்தரவால் பால் ராபின்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.



ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பணி புரிந்து வந்த பெண் இ.எம்.டி.யிடம் முறைகேடாக நடந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட மேலாளர் பால் ராபின்சன் மீது திருவாடனை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஜி.வி.கே. நிர்வாகம் தந்த அழுத்தம் காரணமாக வழக்கு பதிவு செய்வதில்  காவல் துறை மெத்தனமாக இருந்தது. 


இதை அடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் பால் ராபின்சன் மீது வழக்கு பதிவு செய்யும் படி Crl.O.P. No . 4532 Of 2012 தாக்கல் செய்தார் இ.எம்.டி. இந்த வழக்கு கடந்த திங்கள் கிழமை (16 .04 .2012 ) அன்று மாண்புமிகு நீதியரசர் A.செல்வம் அவர்கள் முன்பாக  விசாரணைக்கு வந்து காவல் துறை பதில் மனு தாக்கல் செய்வதற்காக புதன்கிழமை (18 .4 .2012 )அன்று ஒத்தி வைக்கப்பட்டது.  18 .4 .2012 அன்று காவல் துறை சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் திருவாடனை மகளிர் காவல் நிலையத்தில் மனுதாரர் கேட்டுள்ளபடி FIR No. 3 Of 2012   ல்   பால் ராபின்சன்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்தார். இவ்வாறு உயர்நீதிமன்றம் சென்றதால் தான் பால் ராபின்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


தினமலர் செய்தி

No comments:

Post a Comment