Friday 8 June 2012

20 நாள்களுக்குள் 108 ஆம்புலன்சில் உள்ள பழுதுகளை நீக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு


108 ஆம்புலன்ஸ் வண்டியில் பராமரிக்கவேண்டிய அத்தியாவசியமான உயிர் காக்கும் உபகரணங்கள்  உட்பட வண்டிக்கு ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்யும்படி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பலமுறை கோரிக்கைகள் வைத்தபோதும் போதும் ஜி.வி.கே.நிர்வாகம் எதையும் முழுவதுமாக சரிசெய்து தருவதில்லை. அதனால் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு ஆம்புலன்சில் உள்ள குறைகளை கோரிக்கை மனுவாக 30 . 05 . 2012 அன்று அளித்தோம்.மனுவை ஏற்றுக்கொண்ட  மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி  ஒவ்வொரு ஆம்புலன்சில் உள்ள குறைகளை அறிய தனி கமிட்டி   போடப்பட்டு ஒவ்வொரு ஆம்புலன்சாக சென்று அந்த கமிட்டி ஆம்புலன்சில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தது.

 அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் , ஜி.வி.கே. நிர்வாகம்,மாவட்ட சுகாதார துறை ஜே.டி., பைலட்கள், இ.எம்.டி. கள் பங்கேற்கும் விதத்தில் அமைந்த சிறப்பு கூட்டத்திற்கு 08 . 06 . 2012 அன்று மாவட்ட ஆட்சி தலைவர் திரு. அன்சுல் மிஸ்ரா  ஏற்பாடு செய்தார்.  இதில் சிறப்பு என்னவென்றால் இது வரை மாவட்ட ஆட்சி தலைவர், ஜே.டி. மற்றும் ஜி.வி.கே.நிர்வாகம் கலந்து கொண்ட பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. ஆனால் எந்தவொரு கூட்டத்திலும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் வெற்றிகரமாக இயங்க காரணமாக உள்ள இ.எம்.டி. , பைலட்களை அழைத்து பேசியதில்லை. நமது யூனியனின் தொடர் நடவடிக்கைகள்  காரணமாகவே இந்த பேச்சு வார்த்தைக்கு ஊழியர்களை அழைத்துப் பேசி உள்ளனர். 

இந்த சிறப்பு கூட்டத்தில் நமது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஆம்புலன்சை பராமரிப்பதில்  ஜி.வி.கே. நிர்வாகம் காட்டும் அலட்சியப்போக்கை புள்ளி விபரத்தோடு  ஒவ்வொரு ஆம்புலன்சிலும் உள்ள குறைபாடுகள் என்னென்ன வென்று  பட்டியல் போட்டு சுட்டிக் காட்டினர். அப்ரைசல் என்ற பெயரில் சம்பள உயர்வு வழங்கும் முறை ஒழிக்கப்பட்டு , சீனியார்டி அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப் பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நமது ஊழியர்கள் சொன்ன அனைத்து குறைபாடுகளையும் குறித்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அவை அனைத்தும் 20 நாள்களுக்குள் சரி செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். 

No comments:

Post a Comment