Saturday 28 July 2012

தேனி மாவட்டத்தில் ஜே.டி. ஆய்வு! ஓடுவதற்கு தகுதி இல்லாத கம்பம் வண்டியை சரிசெய்ய உத்தரவு

தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்(108AWU) சங்கம் சார்பாக ஆம்புலன்ஸ் வண்டிகள் சரிவர பரமரிக்கப்படுவதில்லை என்று மனு அளிக்கப்படிருந்தது. அதனை அடுத்து ஜே.டி. நேரில் ஆய்வு மேற்கொண்டார், அப்போது 4 டயர்களும் தேய்ந்து போய் ஓடுவதற்கு தகுதியே இல்லாமல் இருந்த கம்பம் வண்டியை அந்த வண்டி சரிசெய்யும் வரை ஓட்டக்கூடாது என்று உத்தரவிட்டார். அதனை அடுத்து அந்த வண்டி நிர்வாகத்தால் சரி செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆம்புலன்சிற்கும் 30 லட்சம் வரை ஆண்டுக்கு பராமரிப்பு செலவு ஆகிறது என்று கணக்கு எழுதும் ஜி.வி.கே. ஆம்புலன்ஸ் வண்டிகளில் டயர்களைக் கூட மாற்றுவதில்லை என்பது தான் நடைமுறை உண்மை. இதை அரசின் கவனத்திற்கு அனைத்து வழிகளில் நமது சங்கம் கொண்டு சென்று தான் இருக்கிறது. 

Sunday 22 July 2012

பணிநீக்கம் செய்யப்பட்ட பயிற்சி பெற்ற பணியாளர்களை திரும்பவும் வேலைக்கு எடுத்து கொள்ள வேண்டும்

108 ஆம்புலன்ஸ் திட்டம் தற்போது விரிவு படுத்தப்பட்டு அரசு மருத்துவ மனைகளில் உள்ள இலவச ஆம்புலன்ஸ் களும் இந்த திட்டத்தில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் மொத்தம் 450 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. புதிதாக 150 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அந்த வண்டிகளை இயக்க ஆள்கள் தெரிவு நடைபெற்று வருகிறது. பணியாளர்களுக்கு 12 மணி நேர வேலை குறைவான சம்பளம் என்று இருப்பதால் இந்த பணிக்கு சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை. 

Saturday 21 July 2012

சம்பளம் குறைவாக இருப்பதால் ‘108’ ஓட்ட டிரைவர் கிடைக்கவில்லை - தினகரன் நாளிதழ்


போதிய ஆட்கள் கிடைக்காததால் ‘108’ சேவைக்கு கூடுதலாக வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை இணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை அளிக்கும் வகை யில் 108 சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை யில் தமிழகத்தில் மொத்தம் 470 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. தமிழக அரசும், ஜி.வி.கே இஎம்ஆர்ஐ நிறுவனமும் இணைந்து இந்த சேவையை அளித்து வருகின்றன. இதை விரிவுபடுத்தும் வகையில் புதிதாக 150 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றை 108 சேவையில் இணைக்கும் நிகழ்ச்சி 19ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.

Friday 20 July 2012

இழப்பீடு வழங்க கோரி மதுரை ஆட்சியரிடம் கோரிக்கை

மதுரை ஆட்சியரிடம் வாகனங்கள் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று வைத்த கோரிக்கையை அடுத்து அனைத்து வாகங்களிலும் என்னென்ன பழுது உள்ளது என்று அறிய ஒரு கமிட்டி போட்டு ஆய்வு செய்து அவ்வாறு உள்ள குறைபாடுகளை இருபது நாள்களுக்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஜி.வி.கே. நிர்வாகம் இந்த பழுதுகளை நீக்க இன்று வரை ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டது. கொட்டாம்பட்டி 108 ஆம்புலன்ஸ் விபத்திற்கு பிரேக் சரிவர இல்லாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. 

குவியும் குற்றச்சாட்டு ... குளறுபடியில் 108 !

அவசர காலத்தில் உயிரைக் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையே கொஞ்சம் கொஞ்சமாக மரணப் படுக்கைக்குப் போகும் நிலையை என்னவென்று சொல்வது ? என்ன பிரச்னை?


ரூ.10 ௦ லட்சம் இழப்பீடு தரவேண்டும்

விபத்தில் இறந்து போன மதுரை இ.எம்.டி. சரவணன் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10 லட்சத்தை ஜி.வி.கே. நிர்வாகம் உடனடியாக தர வேண்டும். திரு.சரவனணன் அவர்கள் இந்த பணியை சேவை நோக்கத்தோடோ செய்து வந்தார். அவரின் இழப்பு என்பது பணத்தால் ஈடு செய்ய கூடியது அல்ல . இருந்த போதும் அவரின் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு ஜி.வி.கே. நிர்வாகம் உடனடியாக இந்த  இழப்பீட்டுத் தொகையை கொடுக்க வேண்டும்.இதற்காக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது. 

Wednesday 18 July 2012

மதுரை சரவணன் இ.எம்.டி. விபத்தால் மரணம் அடைந்தார்.

108 ஆம்புலன்சில்  மதுரை கொட்டாம்பட்டி லோக்கேசனில் இ.எம்.டி.யாக வேலை பார்த்து வந்த திரு. சரவனணன் அவர்கள் இன்று அதிகாலை (19 . 07 . 2012 )  4 . 30 மணிக்கு பணி நிமித்தமாக  108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே கவனக்குறைவாக  வந்த லாரி மோதி அகால மரணம் அடைந்தார். திறமையான பணியாளரான திரு . சரவனணன் அவர்களுக்கு திருமணம் முடிந்து குழந்தை உள்ளது.  அவரது குடும்பத்தினர் மேலூரில் வசிக்கின்றனர். சரவனணன் குடும்பத்தினரும், தமிழகம் முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் அவரது இழப்பால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் ( ஜி.வி.கே.) உடனடியாக தலையிட்டு அவரது குடும்பத்திற்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை அவரது இழப்பால் வாட்டும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறது. 

Friday 13 July 2012

குவியும் குற்றச்சாட்டு குளறுபடியில் 108 - குமுதம் ரிப்போர்ட்டர்

அவசர காலத்தில் உயிரைக் காக்கும் '108 ' ஆம்புலன்ஸ் சேவையே கொஞ்சம் கொஞ்சமாக மரணப் படுக்கைக்குப் போகும் நிலையை என்னவென்று சொல்வது ?
 மேலும் படிக்க