Friday 20 July 2012

குவியும் குற்றச்சாட்டு ... குளறுபடியில் 108 !

அவசர காலத்தில் உயிரைக் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையே கொஞ்சம் கொஞ்சமாக மரணப் படுக்கைக்குப் போகும் நிலையை என்னவென்று சொல்வது ? என்ன பிரச்னை?


" தி.மு.க. ஆட்சியில் 95 சதவிகிதம் அரசுப் பாங்குடனும் 5 சதவிகிதம் தனியார் பாங்குடனும் தொடங்கப்பட்டது தான். இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை இப்படி ஆர்பப் பங்கைப் போட்டுவிட்டு , அரசுப் பணம் மொத்தத்தையும் ஏப்பம் விடுகிறது தனியார் நிறுவனம். தனியாரிடம் உள்ள ஐந்து சதவிகிதப் பங்கு என்பது நிர்வாகம் , சாப்ட்வேர் , மேலாண்மை ஆகிய பணிகளுக்கு மட்டுமே, இந்தப் பணிகளுக்காக ஆந்திராவைச் சேர்ந்த ஜி.வி.கே. குழுமத்தின் இ.எம்.ஆர். ஐ. (அவசர கால மேலாண்மை மற்றும் ஆராட்சி நிறுவனம் ) என்ற அமைப்புடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சேவைக்காக 450 ஆம்புலன்ஸ் வண்டிகள், 997 டிரைவர்கள் , 1008 முதலுதவிப் பணியாளர்கள், 250 ஊழியர்கள், 150 உதவியாளர்கள் என கிட்டத்தட்ட 2 , 500 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களை நிர்வாகிப்பதுதான் தனியாரின் பணி. 

ஆனால் தொழிலாளர்கள் வாங்கும் மொத்தச்சம்பளத்திற்கு  இணையாக உள்ளது. ஜி.வி.கே. குளுமத்தால் நியமிக்கப்பட்ட சுமார் 100 பேர் வாங்கும் சம்பளம். இதை யாரும் கண்டுகொள்வதே இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் 600 கோடி ரூபாயை இந்த நிறுவனத்திற்கு அரசு வழங்கியுள்ளது. ஆனால் 108 ஆம்புலன்ஸ்களில் கட்டாயம் இருக்க  வேண்டிய ஆக்சிஜன் சிலிண்டரைக் கூட சரியாகப் பராமரிக்கவில்லை. வாகனத்தின் டயர்கள் பஞ்சராகி நடுரோட்டில் நிற்கின்றன. அப்படி இருந்தும் டயர்களை மாற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. உதிரி பாகங்களை இதுவரை மாற்றியதே இல்லை. 

ஆம்புலன்ஸ் வேகமாக ஓட்டக்கூடாது 40 கிலோமீட்டருக்கு மேல் செல்லக்கூடாது. அப்போதுதான் எரிபொருள் சிக்கனப்படுத்த முடியும் என்று டிரைவர்களிடம் கூறியுள்ளனர். அவ்வாறு செயல்படுபவர்களுக்கு மட்டும் தான் ஊக்கத் தொகை கொடுப்போம் என்கின்றார்கள். ஆம்புலன்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாரம் ஒருமுறை நோய் எதிர்ப்பு தடுப்பூசி போடவேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக தடுப்பூசியே போடுவதில்லை. ஒவ்வொரு ஊழியருக்கும் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. தொகை பிடிக்கப்படுகிறது. ஆனால் , இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த 400 பேருக்கு இதுவரை இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். 

திருச்சியில், சாலையில் அடிபட்டுக் கிடந்தவரைக் காப்பாற்ற முயன்ற போது , 108 ஆம்புலன்ஸ் ட்ரைவர் மீது மற்றொரு வாகனம் மோதி பலியானார். அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. 108 ஆம்புலன்சில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது , ஆலோசனை கேட்பதற்காக கண்ட்ரோல் ரூமில் டாக்டர் இருக்க வேண்டும். நாங்கள் தொடர்புகொண்டால் எப்போதும் நாட் இன் யூஸ் என்ற பதில்தான் வரும். 
ஜி.வி.கே. குழுமத்தின் அதிகாரிகளை யாரவது தட்டிக் கேட்டால் டிரான்ஸ்பர் அல்லது சஸ்பென்ட் செய்து விடுகின்றனர். இதையெல்லாம் தட்டிக் கேட்ட திருச்சியை சேர்ந்த ஒரு இ.எம்.டி. யை 24 முறை ட்ரான்ஸ்பர் செய்துள்ளனர். ஆனால் , இந்த இ.எம்.டி. 108 ஆம்புலன்சில் 27 பிரசவங்களைப் பார்த்து ,தொண்டு நிறுவனங்களால் பாராட்டப்பட்டவர். இவரைப் போல் நிர்வாகத்தை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்காக இதுவரை 184 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஊதிய உயர்வு , இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் என ஒவ்வொரு மாவட்ட கலெக்டரின் பெயரில் விளம்பரம் செய்யப்பட்டு ஆட்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் , இந்தத் தேர்வில் விதிகள் எதுவுமே  பின்பற்றப்படவில்லை. 

108 ஆம்புலன்ஸ்  நடக்கும் முறைகேடுகள் குறித்து ஜி.வி.கே. குழுமத்திற்கு எதிராக திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் , திருச்சி ,கடலூர், ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றகளில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் நல கோர்ட்டிலும் வழக்குத் தொடர்ந்துள்ளோம். இந்த ஆண்டுடன் ஜி.வி.கே. குழுமத்துடன் அரசு செய்துள்ள ஒப்பந்தம் முடிகிறது. இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் கூடாது. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்"

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment