Friday 20 July 2012

இழப்பீடு வழங்க கோரி மதுரை ஆட்சியரிடம் கோரிக்கை

மதுரை ஆட்சியரிடம் வாகனங்கள் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று வைத்த கோரிக்கையை அடுத்து அனைத்து வாகங்களிலும் என்னென்ன பழுது உள்ளது என்று அறிய ஒரு கமிட்டி போட்டு ஆய்வு செய்து அவ்வாறு உள்ள குறைபாடுகளை இருபது நாள்களுக்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஜி.வி.கே. நிர்வாகம் இந்த பழுதுகளை நீக்க இன்று வரை ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டது. கொட்டாம்பட்டி 108 ஆம்புலன்ஸ் விபத்திற்கு பிரேக் சரிவர இல்லாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. 


அந்த வாகனத்தின் புகார் புத்தகத்தில் பிரேக் சரிசெய்யப்பட வேண்டும் என்று புகார் பதிவு செய்தும் அதை ஜி.வி.கே. நிர்வாகம் சரிசெய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜி.வி.கே. அலட்சியத்தால் ஒரு தொழிலாளி   அநியாயமாக உயிர் இழந்திருக்கிறார். அந்த குடும்பம் இன்று நிர்கதியற்று நிற்கிறது. தனது லாபம் மட்டுமே பெரிது என்று மிகுந்த அகம்பாவத்தோடு செயல்படும் ஜி.வி.கே. நிர்வாகம் தொழிலாளர்களின் உயிர்களை அதற்கு பழியாக்கி வருகிறது. ஜி.வி.கே. வின் அலட்சியத்தால் இறந்து போன  இ.எம்.டி. சரவணன் குடும்பத்திற்கு ரூ.10  லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அதை பற்றி எந்த முடிவையும் இன்னும் ஜி.வி.கே. அறிவிக்கவில்லை. 

அரசு மருத்துவமனைகளில் இருக்கும் இலவச ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டு தற்போது அனைத்துமே 108 வசம் வந்துள்ள நிலையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பணி பழு இரட்டிப்பாக கூடியுள்ளது. கொள்ளை லாபமே குறிக்கோள் என்று செயல்படும் ஜி. வி.கே. இவை எவற்றையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பணியாளர்களை பழிவாங்கும் போக்கோடு  பந்தாடி வருகிறது. இவை அனைத்தையுமே குறுப்பிட்டு 20 .07.2012 அன்று  மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்  சங்கத்தை சேர்ந்த  ஊழியர்கள் மனு அளித்தனர்.  இதில்  இ.எம்.டி. சரவணன் குடும்பத்திற்கு ரூ.10  லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை ஆகும். 

 விபத்து பற்றி R.T.O விசாரித்து வருவதாகவும், ஆம்புலன்ஸ் குறைபாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஜே.டி.யை  விசாரிக்க உத்தரவிடுவதாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். 

No comments:

Post a Comment