Sunday 22 July 2012

பணிநீக்கம் செய்யப்பட்ட பயிற்சி பெற்ற பணியாளர்களை திரும்பவும் வேலைக்கு எடுத்து கொள்ள வேண்டும்

108 ஆம்புலன்ஸ் திட்டம் தற்போது விரிவு படுத்தப்பட்டு அரசு மருத்துவ மனைகளில் உள்ள இலவச ஆம்புலன்ஸ் களும் இந்த திட்டத்தில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் மொத்தம் 450 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. புதிதாக 150 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அந்த வண்டிகளை இயக்க ஆள்கள் தெரிவு நடைபெற்று வருகிறது. பணியாளர்களுக்கு 12 மணி நேர வேலை குறைவான சம்பளம் என்று இருப்பதால் இந்த பணிக்கு சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை. 



ஏற்கனவே நன்கு பயிற்சி பெற்ற , இந்த வேளையில் பணிபுரிந்த அனுபவம் உள்ள நிர்வாகத்தின் அடக்குமுறையால் வேலையை விட்டு நீக்கப்பட்ட பணியாளர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்கள் இந்த வேலையை செய்வதில் ஆர்வமாக உள்ளனர். அவர்களை 108 நிர்வாகம் பணிக்கு அமர்த்தினால் அவர்களுக்கு புதிதாக எந்த பயிற்சியும் கொடுக்க தேவை இருக்காது. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தொழிலாளர்களை படுத்தும் பாடு சொல்லி மாளாது. அவர்களுக்கு குறைவான ஊதியம் மட்டுமே கொடுத்து அவர்களை 12 மணி நேரம் வேலை வாங்குவதும்  , வெளியூரில் போஸ்டிங் போடுவதும் ,அடிக்கடி பணிமாற்றம் செய்வதும் என்ற எண்ணில்லா இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். 

இந்த நிலையை மாற்றி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் , பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை  வேலைக்கு எடுக்கவும், கட்டுபடியாகாத சம்பளத்தில் பணிபுரிந்து கொண்டிருக்ககூடிய தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வு வழங்கவும் , பணிநேரத்தை 8 மணி நேரமாக குறைக்கவும் , உள்ளூரிலையே பணி வழங்கவும் வேண்டும் என்று  இந்த அறிக்கையின் மூலம்  கேட்டுக் கொள்கிறோம் 

No comments:

Post a Comment