Monday 19 August 2013

கோவை மண்டலத்தில் 108 ஊழியர்களின் எழுச்சி

கடந்த 26 ஜூலை 2013 ம்  நாள் சென்னையில் வள்ளுவர் கோட்டதில் இயற்கை நீதிக் கோட்பாட்டை கேலிக் கூத்தாக்குவதை எதிர்த்து  நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்பாட்டதில் கலந்து கொண்ட நமது சங்கத்தின் முன்னணி ஊழியர்களுக்கு நாமக்கல்,கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பழி வாங்கும் நடவடிக்கைகளை ஏவிவிட்டனர் பால் ராபின்சன் மற்றும் குமரன் இருவரும். ஜூலை மாதம் முழு ஊதியமும் பிடிக்கபட்டது ,சென்னைக்கு பணியிட மாற்றம் போடப்பட்டது .



நமது தோழர்கள் யாரும் இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டு துவண்டு விடவில்லை கோவை மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டத்தை கரூரில் கூட்டி கலந்தாலோசித்து  மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடிவெடுக்கபட்டது, கூட்டதில் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் பால்கண்ணன் மற்றும் கோவை மண்டல செயலாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு உரையாற்றினர்.மாநில நிர்வாக குழு உறுப்பினர்  சாமுவேல் தொடக்க மற்றும் நன்றியுரை தெரிவித்தார் .   இதை தொடர்ந்து  05.08.2013  ம் நாள் முறையே மூன்று மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு தான் அனைவருக்கும் ஊதியம் வரைவு காசோலையாக வழங்கப்பட்டது, பணியிடமாற்றம் சம்பந்தமாக  பழிவாங்கும் செயல் இல்லை ஆள் தேவை இருக்கிறது என்று நிர்வாகம் சொன்ன பொய்யை ஊழியர்கள் யாரும் நம்ப  தயாராக இல்லை.  இது பழிவாங்கும் செயல் தான் என்று டி .எம் பால்ராபின்சன் மற்றும் குமரன் பேசிலிருந்து உறுதியானது. நமது உண்ணாவிரதப் போராட்டம் மூலம் நமது நியாயமான கோரிக்கைகளுக்கு நிர்வாகம் பணிந்தது நாமக்கல் மற்றும் பெரம்பலூர் ஊழியர்களுக்கு தத்தம் மாவட்டங்களில் பணி வழங்கப்பட்டது.நமது ஒற்றுமைக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. வாருங்கள் தோழர்களே மடை திறந்த வெள்ளம் போல்  நம்   உரிமைகளை மீட்டெடுப்போம்.  

No comments:

Post a Comment