Saturday 24 August 2013

நோயா­ளி­யுடன் சென்ற ஆம்­பு­லன்சின் டயர்...வெடித்­தது! 108 அவ­சர வாக­னங்­க­ளுக்கு பரா­ம­ரிப்பு தேவை


புளி­யந்­தோப்பு நெடுஞ்­சா­லையில், நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு, பிர­ச­வ­மான பெண் ஒரு­வரை 
அவ­சர சிகிச்­சைக்கு ஏற்றி சென்ற 108 ஆம்­பு­லன்சின் ‘டயர்’  வெடித்­ததால், கடும் விபத்து ஏற்­படும் சூழல் உரு­வா­னது. அதிர்ஷ்­டவச­மாக ஓட்­டு­னரின் சாதுர்­யத்தால் விபத்து தடுக்­கப்­பட்­டது. இந்த விபத்­திற்கு, ஆம்­புலன்ஸ் வாக­னங்­களின் பரா­ம­ரிப்பு குறைவே காரணம் என, ஆம்­புலன்ஸ் ஓட்­டு­னர்கள் தெரி­விக்­கின்­றனர்.
திக்...திக்...

வியா­சர்­பாடி, கன்­னி­கா­பு­ரத்தை சேர்ந்­தவர் நிரோஷா. பிர­ச­வத்­துக்­காக புளி­யந்­தோப்பில் உள்ள, மாந­க­ராட்சி மருத்­து­வ­ம­னையில் சேர்க்­கப்­பட்டார். அவ­ருக்கு குழந்தை பிறந்­ததும், திடீ­ரென மயக்கம், மூச்­சுத்­தி­ணறல் 
ஏற்­பட்­டது.

அவ­சர சிகிச்சை தேவை 
என்­பதால், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்­து­வ­ம­னைக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டது. நேற்று முன்­தினம் இரவு, அவரை ஏற்றி கொண்டு, 108 ஆம்­புலன்ஸ் வாகனம், ராய­புரம் நோக்கி சென்­றது.புளி­யந்­தோப்பு நெடுஞ்­சாலை, காவல்­நி­லையம் அருகே சென்­ற ­போது, திடீ­ரென வாக­னத்தின் முன்­பக்க ‘டயர்’ வெடித்து, ஆம்­புலன்ஸ் நிலை தடு­மா­றி­யது. சாலை தடுப்பில் மோத முயன்ற நிலையில், ஓட்­டுனர் முத்­து­ரா­ம­லிங்கம் சாதுர்­ய­மாக, வாக­னத்தை நிறுத்­தினார்.

இதில், அவ­ரது கையில் அடி­பட்டது. பெண் மருத்­துவ உத­வி­யாளர் தலை­யிலும் அடி­பட்­டது. அதிர்ஷ்­ட­வ­ச­மாக, சிகிச்­சைக்கு சென்ற நிரோஷா, பாதிப்­பின்றி தப்­பினார். சற்று சிக்கல் ஆகி­யி­ருந்­தாலும், உயி­ரி­ழப்பு ஏற்பட்டு இருக்கும்.

தேய்ந்த ‘டயர்’
ஆம்­புலன்ஸ் வாக­னத்தின் ‘டயர்’ தேய்ந்து மிக மோச­மான நிலையில் இருந்தும், அதை மாற்­றாமல் தொடர்ந்து இயக்­கி­யதே விபத்­துக்கு காரணம் என, கூறப்­ப­டு­கி­றது.இது குறித்து, 108 ஆம்­புலன்ஸ் தொழி­லாளர் சங்க மாநில 
நிர்­வாகி, பால்­கண்ணன் கூறு­கையில், ‘‘வாக­னங்கள் போதிய பரா­ம­ரிப்பு இல்­லா­ததால் விபத்­துகள் ஏற்­ப­டு­கின்றன. ஊழி­யர்­களும் உயி­ரி­ழந்து உள்­ளனர். வாக­னங்­களை முறை­யாக பரா­ம­ரிப்­பதில் நிர்­வாகம் கவனம் செலுத்த வேண்டும்,’’என்றார்.


108 சேவையின் முதன்மை செயல் அதி­காரி, ஸ்ரீதர் கூறு­கையில்,‘‘விபத்து குறித்து விசா­ரணை நடந்து வருகிறது,’’ என்றார்.
அவ­சர கால ஆம்­புலன்ஸ் 
சேவை மகத்­தா­னது தான்; அதே நேரத்தில், அது, விபத்­து­க­ளுக்கும், உயி­ரி­ழப்­பு­க­ளுக்கும் கார­ண­மா­கி­விடக் கூடாது என்­பதால், ஒட்­டு­மொத்த ஆம்­புலன்ஸ் வாக­னங்­களுக்கும், பராம­ரிப்பு என்ற அவ­சர சிகிச்­சையை உடனே மேற்­கொள்­வது அத்­தி­யா­வ­சியம்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=786892

No comments:

Post a Comment