Tuesday 27 August 2013

தினமலரில் 108 ஆம்புலன்சின் மோசமான பராமரிப்பு குறித்து வந்த செய்தி- பைலட் முத்துராமலிங்கத்தை வேலையை விட்டு நிறுத்தியது நிர்வாகம்.

வியா­சர்­பாடி, கன்­னி­கா­பு­ரத்தை சேர்ந்­தவர் நிரோஷா. பிர­ச­வத்­துக்­காக புளி­யந்­தோப்பில் உள்ள, மாந­க­ராட்சி மருத்­து­வ­ம­னையில் சேர்க்­கப்­பட்டார். அவ­ருக்கு குழந்தை பிறந்­ததும், திடீ­ரென மயக்கம், மூச்­சுத்­தி­ணறல்  ஏற்­பட்­டது.அவ­சர சிகிச்சை தேவை என்­பதால், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்­து­வ­ம­னைக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டது. நேற்று முன்­தினம் இரவு, அவரை ஏற்றி கொண்டு, 108 ஆம்­புலன்ஸ் வாகனம், ராய­புரம் நோக்கி சென்­றது.புளி­யந்­தோப்பு நெடுஞ்­சாலை, காவல்­நி­லையம் அருகே சென்­ற ­போது, திடீ­ரென வாக­னத்தின் முன்­பக்க ‘டயர்’ வெடித்து, ஆம்­புலன்ஸ் நிலை தடு­மா­றி­யது. சாலை தடுப்பில் மோத முயன்ற நிலையில், ஓட்­டுனர் முத்­து­ரா­ம­லிங்கம் சாதுர்­ய­மாக, வாக­னத்தை நிறுத்­தினார். இதில், அவ­ரது கையில் அடி­பட்டது. பெண் மருத்­துவ உத­வி­யாளர் தலை­யிலும் அடி­பட்­டது. அதிர்ஷ்­ட­வ­ச­மாக, சிகிச்­சைக்கு சென்ற நிரோஷா, பாதிப்­பின்றி தப்­பினார். சற்று சிக்கல் ஆகி­யி­ருந்­தாலும், உயி­ரி­ழப்பு ஏற்பட்டு இருக்கும். இதுவே தினமலரில் வந்த பைலட் முத்துராமலிங்கம் பற்றிய செய்தியாகும். இந்த செய்தி வந்த வுடன் உடனடியாக நிர்வாகம் ஆம்புலன்சில் உள்ள குறைபாடுகளை சரி செய்து இருக்க வேண்டும்.  ஆனால் உடனே கோவம் கொண்ட எச்.ஆர். அப்பாத்துரை முத்துராமலிங்கத்தை வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.அப்பாத்துரையின் இந்த அராஜக செயல்களுக்கு எதிராக  இது குறித்து விரைவில் உயர் நீதிமன்றத்தில் முத்துராமலிங்கம் வழக்கு தொடுக்க உள்ளார். 

No comments:

Post a Comment