Friday 16 August 2013

12 மணி நேர வேலை சட்ட விரோதம் தொழிலாளர் உதவி ஆணையாளர் , சென்னை வலியுறுத்தினார்.

16.08.2013 அன்று சென்னையில் தொழிலாளர் உதவி ஆணையாளர் முன்பு (DMS ) 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் அமைப்பு செயலாளர் த.சிவகுமார் மற்றும்  சங்க நிர்வாகிகளும், GVK EMRI சார்பில் திரு.அப்பாத்துரை மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் இடையில் பேச்சு  வார்த்தை நடைபெற்றது.


( இந்த பேச்சு வார்த்தைக்கு முன்னதாக நமது 108 ஆம்புலன்ஸ் சங்க நிர்வாகிகள் திட்ட அலுவலர் (project director (TNHSP) அவர்களை சந்தித்து GVK EMRI செய்து வரும் சட்ட முறைகேடுகளையும், தொழிலாளர் விரோத போக்குகளையும் விளக்கி மனு ஒன்றை அளித்தனர், அவரும் நாம் விளக்கி சொன்ன தொழிலாளர் துயரங்களை களைவதாக கூறினார். )

 இந்த பேச்சு வார்த்தையில் தொழிலாளர் உதவி ஆணையாளர் அவர்கள் 12 மணி நேர வேலை என்பது சட்ட விரோதம் ஆகும், 8 மணி நேரம் வேலை அதற்கு கூடுதலாக பார்க்கும் வேலைக்கு (4 மணி நேரம் ) ஓ. டி. (ஒரு மணி நேரத்திற்கு இரண்டு மணி நேர சம்பளம் )  அளிக்கப்பட வேண்டும் . D .A . எனும் பஞ்சப்படி வழங்க வேண்டும் அவ்வாறு வழங்க மறுப்பது சட்ட விரோதம் ஆகும், இல்லாவிட்டால் GVK EMRI  குற்ற நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்று கூறினார். மேலும் பேச்சு வார்த்தையின் போது தொழிலாளர் இடமாற்றம் குறித்து transfer policy  வகுக்கப்பட்ட வேண்டும் என்றும் கம்பனி சர்வீஸ் ரூல்ஸ் செல்லாது என்றும் தொழிலாளர்களுக்கு உள்ள நிலை ஆணை விதிகளை வகுக்குமாறும் கூறினார்.

 ஒரு பைலட் பணியின் போது விபத்து ஏற்பட்டு குற்ற வழக்கு பதிவானால் அதையே காரணம் காட்டி குற்ற வழக்கு முடியும் வரை வேலை வழங்க மறுப்பது எங்கும் இல்லாத வினோத நடைமுறை என்றும் அறிவுறுத்தினார்.இவற்றை எல்லாம் மேலிடத்தில் கலந்து பேசி அடுத்த பேச்சுவார்த்தையின் போது முடிவு தெரிவிப்பதாக இருவரும் வழக்கமான பாணியில் கூறி சென்றனர். அடுத்த கட்ட பேச்சு வார்த்தை 11.09.2013 அன்று நடைபெறும். GVK நிர்வாகம் தொழிலாளர் துயரங்களை களைய எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது 5 ஆண்டு கால அனுபவத்தில் நமக்கு நன்கு தெரியும் ,எனவே நாம் GVK வை நமது கோரிக்கைகளை ஏற்க வைக்க ஒரு வலுவான போராட்டத்தினை நடத்த தயாராக வேண்டும்.  

No comments:

Post a Comment