Wednesday 7 August 2013

ஆம்புலன்ஸ் பணியாளர் கரூரில் உண்ணாவிரதம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வாயில் கறுப்பு துணிகட்டி உண்ணவிரதப் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு, 108 ஆம்புலன்ஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மாவட்ட அமைப்பு சார்பில், தாலுகா அலுவலகம் முன், வாயில் கறுப்பு துணிகட்டி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்துதல், ஜி.வி.கே., நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தல் உள்பட, 14 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, மாநில அமைப்பு செயலாளர் பால்வண்ணன் பேசினார்.
கரூர் மாவட்ட தலைவர் சுந்தரவடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். ஆம்புலன்ஸ் பைலட் முத்துகுமார் நன்றி தெரிவித்தார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=775641

No comments:

Post a Comment