Thursday 12 September 2013

நிர்வாகத்தின் அலட்சியபோக்கினால் வேலைநிறுத்தத்தை நோக்கி பயணிக்கும் 108 தொழிலாளர்கள்

கடந்த 11/09/2013 அன்று சென்னை D.M.S அலுவலகத்தில் தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் நமது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்திற்கும் GVKemri நிறுவனத்துக்கும்  இடையிலான பேச்சுவர்த்தையில் நாம் நினைத்தது போலவே எந்த அதிகாரியும் கலந்துகொள்ளவில்லை அதற்கு மாறாக பாலமுருகன் என்பவரிடம் கடிதம் ஒன்றை கொடுத்தனுப்பி மேலும் ஒரு வாய்தா கேட்டனர்.

இதை கேட்ட தொழிலாளர் துணை ஆணையர் திரு பாஸ்கரன் அவர்கள் கோபமடைந்தார்.அவர்களின் கடிதத்தை வாங்க மறுத்ததோடு வன்மையாக கண்டிக்கவும் செய்தார்.தொலைதூரத்திலிருந்து வரும் தொழிலாளர்களை ஏன் இப்படி அலைக்கழிகிரீர்கள் என்று கூறி உடனே அவரை  வெளியேற்றினார்.
அதன் பின்னர் நமக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர் பேச்சுவார்த்தை 18/09/2013 க்கு தள்ளிவைக்கப்பட்டது .

சட்ட ரீதியான அணுகுமுறைக்கு இவர்கள் இம்மியளவும் மதிப்பளிக்க தயாராக இல்லை  என்பது தெள்ளத்தெளிவானது.வேலைநிறுத்தம் செய்யாமல் அமைதியான முறையில் நமது கோரிக்கைகளை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கைக்கு இவர்கள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.

மக்கள் ஆதரவுடன் சட்ட ரீதியான மாநிலம் தழுவிய வேலைநிருத்தத்தால் மட்டுமே நமது உரிமைகளை வென்றெடுத்தாகவேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் தோழர்களே ஒன்றுபடுவோம் நாம் ஒற்றுமையால் வெற்றியை நிலைநாட்டுவோம்.

 இன்னும் ஓரிரு தினங்களில் பிரச்சார குழு அமைத்து நமது நிலைமையை மக்களிடம் எடுத்து செல்லும் விதமாக துண்டு பிரசுரங்கள் மாநிலம் முழுமைக்கும் மாநில சங்கத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும். ஓய்வு நேரங்களில் நாம் அனைவரும்   மாநிலம் முழுமைக்கும் இதனை கொண்டு சேர்ப்போம்.

No comments:

Post a Comment