Wednesday 18 September 2013

சைரன் இல்லை, டயர் மோசம், ஏ.சி., பழுது கமுதி "108' ஆம்புலன்சில் தான் இத்தனையும்


கமுதியில் உள்ள, "108' ஆம்புலன்ஸில் சைரன் ஒலிக்கவில்லை. "மொசைக்' போல மழுங்கிய டயர்கள், "ஏ.சி.,' பழுதால் நோயாளிகள் மட்டுமின்றி, பணியாளர்களும் அவதிப்படுகின்றனர்.கமுதியை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அவசர தேவைக்காக, "108' ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது. சமீபகாலமாக பராமரிப்பு இன்றி, மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. முக்கியமாக சைரன் இல்லை. சாலையில்வாகனங்கள் விலகி இடம்கொடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. டயர்களின் நிலைமையும் படுமோசமாக இருப்பதால், கிராமங்களுக்கு விரைந்து சென்று நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவதில், பணியாளர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

ஆம்புலன்சில் ஏ.சி., பழுதடைந்து பல மாதங்களாகியும், சரி செய்யப்படவில்லை. நோயாளிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்."108' திட்ட மேலாளர் ஒருவர் கூறுகையில், ""விரைவில் சரி செய்யப்படும்,'' என்றார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=773783

No comments:

Post a Comment