Wednesday 23 October 2013

நெல்லை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு மேலும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்

கடந்த 21/10/2013 அன்று

 நெல்லை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர்

 8 மணி நேர வேலை

அதற்கு மேல் பார்க்கும் வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் ,

பயணப்படி ,

அகவிலைப்படி ,

போனஸ்,

 அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடம் ,

பணிபாதுகாப்பு ,

பணிமூப்பு அடிப்படையில் ஊதிய உயர்வு

போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட  ஆட்சிதலைவரிடம் மனு கொடுத்தனர்.

 மேலும் பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.

Monday 21 October 2013

வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் மதுரை

கடந்த 16/102013 அன்று

 மதுரையில்108 தொழிலாளர் சங்கத்தின்  இரண்டாவது வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெடறது.

கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய இடங்களை மையப்படுத்தி மாபெரும் போராட்டங்களை நடத்தலாம்.

தொழிலாளர் ஆணையத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் நேரடி நடவடிக்கையில் இறங்குவதைத் தவிர வேறு வழி இல்லை என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. .

இதில் நமது மாநில சங்கத்தின் ஆலோசகர் தோழர் ஆனந்தன் தலைமை வகித்தார்,தலைவர் தோழர் வரதராஜன் ,துணை தலைவர் தோழர் மாரிசாமி ,பொது செயலாளர் தோழர் செந்தில்,அமைப்பு செயலாளர்கள் தோழர் த.சிவகுமார் மற்றும் தோழர் பால்கண்ணன்,கோவை மண்டல செயலாளர் தோழர் சுரேஷ்குமார்,மதுரை மண்டல செயலாளர் தாமஸ் மேலும்  அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். .


Friday 4 October 2013

108 அம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் துண்டு பிரசுரம் விநியோகம்

கடந்த 01.10.2013 அன்று,

 தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பொது மக்களிடம் தங்கள் நிலைமையை விளக்கி மேலும்  தங்களது வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு வேண்டியும் துண்டு பிரசுரம் விநியோகம்  செய்தனர். .



Wednesday 2 October 2013

108 Ambulance staff threaten to go on indefinite strike - The Hindu

Staff attached to the GVK EMRI 108 Ambulance service have threatened to go on a statewide indefinite strike if the management fails to fulfil their various demands.
The demands included job regularisation, reducing their shift timing from 12 hours to 8 hours, and a raise in their salaries.