Monday 25 November 2013

GVK -EMRI மீது சம்பள மோசடி ஊழலை விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

விருதுநகர் வினோத் குமார் 2012 ஜனவரியிலையே வேலையை விட்டு விடுகிறார். ஆனால் அவருக்கு 2013 ஏப்ரல் மாதம் 30 நாள் வேலை பார்த்ததற்கான சேலரி சிலிப் வருகிறது. ஆனால் அந்த பணம் அவரது கணக்கில் வரவில்லை. இவ்வாறு அவர் வேலை பார்த்தாக 13 மாத சம்பளம் GVK அரசிடம் இருந்து ஏமாற்றி வாங்கியுள்ளது. இதுபோல 198 ஊழியர்கள் இவ்வாறு வேலையை விட்டு நின்ற ஊழியர்களின் பெயர்களிலும் மோசடி நடைபெற்றிருக்க கூடும் என்ற சந்தேகத்தில் நமது சங்கத்தின் சார்பில் அரசு பணத்தை மோசடி செய்து வருகின்ற GVK மீது மதுரை காவல் துறை ஆணையாளர், மற்றும் விஜிலென்ஸ் ஆகியவற்றில் புகார் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.ஆனால் அவற்றில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது விசிலன்ஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கடிதத்தின் படி அரசு சுகாதார துறை செயலருக்கு நமது கடிதம் அனுப்பி வைக்கப் பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு அடுத்த வாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment